சாலாவ விபத்தில் சேதமடைந்த வீடுகள் தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு 20 வீதமானவர்கள் மறுப்பு

சாலாவ விபத்தில் சேதமடைந்த வீடுகள் தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு 20 வீதமானவர்கள் மறுப்பு

சாலாவ விபத்தில் சேதமடைந்த வீடுகள் தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு 20 வீதமானவர்கள் மறுப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2016 | 10:37 am

சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் சேதமடைந்த வீடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு 20 வீதமானவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொஸ்கம – சாலாவ ஆயுத களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் அனர்த்தத்திற்குள்ளாகிய மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஜனாதிபதியினால், அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, சுசில் பிரேமஜயந்த மற்றும் அநுர பிரியர்தசன யாப்பா ஆகியோரின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 20 வீதமானோர் மதீப்பீட்டு நடவடிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் மதிப்பீட்டு திணைக்களத்தில் குழுக்கள் நியமிக்கப்பட்டு மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு மேற்கொள்ப்பட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்பில் 80 வீதமானவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளபோதிலும் 20 வீதமானவர்கள் அதற்கு இணங்கவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் பிரகாரம் எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் பத்திரத்தினை சமர்ப்பித்து,10 இலட்சத்திற்கு உட்பட்ட தொகையினை இரு வாரங்களுக்குள், பத்து இலட்சத்திற்கு மேற்ப்பட்ட நிதியினை இரு பிரிவுகளாக வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்