சவூதி அரேபியாவில் சேவையாற்றிய இலங்கைப் பணியாளர்களின் தொடர்பில் ஆராய குழு விஜயம்

சவூதி அரேபியாவில் சேவையாற்றிய இலங்கைப் பணியாளர்களின் தொடர்பில் ஆராய குழு விஜயம்

சவூதி அரேபியாவில் சேவையாற்றிய இலங்கைப் பணியாளர்களின் தொடர்பில் ஆராய குழு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2016 | 8:29 pm

சவூதி அரேபியாவின் அல் – கொபார் நகரிலுள்ள தொழிற்சாலையொன்றில் சேவையாற்றிய இலங்கைப் பணியாளர்களின் நிலமை தொடர்பில் ஆராய தூதரக அதிகாரிகள் அங்கு சென்றுள்ளதாக சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதுவராலயம் தெரிவித்தது.

சவூதி அரேபியாவின் அல் – கொபார் நகரிலுள்ள தொழிற்சாலையொன்றில் சேவையாற்றிய வௌிநாட்டு பணியாளர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை.

இதனால் 12 இலங்கை பணியாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இதேவேளை இவர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய தமது தூதரக அதிகாரிகள் இன்று பிற்பகல் அங்கு சென்றதாக சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதுவராலயம் தெரிவித்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்