சம்மாந்துறையில்  பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களில் நால்வர் விளக்கமறியலில்

சம்மாந்துறையில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களில் நால்வர் விளக்கமறியலில்

சம்மாந்துறையில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களில் நால்வர் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2016 | 7:32 pm

சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர்களில் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று சம்மாந்துறை நீதவான் எம்.எச்.எம்.பஸீல் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களில் நால்வரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் 16 வயதான சந்தேகநபரை 5 இலட்ச ரூபா சரீரப் பிணையில் செல்வதற்கு நீதவான் இதன் போது அனுமதியளித்துள்ளார்.

சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வததக கிடைத்த தகவலுக்கமைய சிவில் உடையில் பொலிஸ் அதிகாரியொருவர் கஞ்சா கொள்வனவு செய்ய சென்றுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்ய முற்படும் போது பொலிஸார் மீது குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன் போது காயமடைந்த ஐந்து பொலிஸ் அதிகாரிகள் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் பொலிஸார் எவ்வித காரணமுமின்றி தம்மீது தாக்குதல் நடத்தியதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்