இராணுவப் பயிற்சிக்கு சர்ச்சைக்குரிய கடற்பரப்பை மூடுவதாக சீனா அறிவிப்பு

இராணுவப் பயிற்சிக்கு சர்ச்சைக்குரிய கடற்பரப்பை மூடுவதாக சீனா அறிவிப்பு

இராணுவப் பயிற்சிக்கு சர்ச்சைக்குரிய கடற்பரப்பை மூடுவதாக சீனா அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2016 | 6:19 pm

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பரப்பின் ஒரு பகுதியை இராணுவப் பயிற்சிகள் நடத்துவதற்காக மூடுவதாக சீனா அறிவித்திருக்கின்றது.

சீனாவின் தெற்கிலுள்ள ஹய்நான் தீவின் அருகிலுள்ள ஒரு பகுதி பல நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்று சீனாவின் கடல் சார் பாதுகாப்பு நிர்வாகம் கூறியுள்ளது.

தென் சீனக் கடலின் கிட்டத்தட்ட முழு கடற்பரப்பையும் சீனா தனக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடுவதை, த ஹேக்கிலுள்ள சர்வதேச நடுவர் மன்றம் மறுத்திருக்கும் சில நாட்களுக்கு பின்னர் சீனாவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

மேலும் ஆசியாவின் ஆறு நாடுகள் இந்த கடற்பரப்பிற்கு உரிமை கொண்டாடி வருகின்றன.

உலகில் மிகவும் விறுவிறுப்பாக இயங்கும் கப்பல் போக்குவரத்து பாதைகள் சிலவற்றின் தாயகமாக தென் சீனக் கடல் இருப்பதோடு, விலைமதிப்பு மிக்க மீன் வளத்தையும், எண்ணெய் படிவுகளையும் கொண்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்