அதிகரித்த மின்சார தேவைக்கு நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் பொருத்தமானதல்ல

அதிகரித்த மின்சார தேவைக்கு நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் பொருத்தமானதல்ல

அதிகரித்த மின்சார தேவைக்கு நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் பொருத்தமானதல்ல

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2016 | 8:54 pm

அடுத்த சில வருடங்களில் நாட்டில் அதிகரிக்கும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் ஒருபோதும் பொருத்தமாக அமையாது என துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பூர் அனல் மின் நிலையத்தை அமைக்காவிட்டால், 2018 ஆம் ஆண்டாகும்போது நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் என சில பொறியியலாளர் குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பிலேயே துறைசார் நிபுணர்கள் பதிலளித்துள்ளனர். நாட்டில் வருடந்தோறும் அதிகரித்துச் செல்லும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக, மாற்று திட்டமாக சம்பூர் அனல் மின் நிலையத்தை அமைக்க வேண்டுமென இலங்கை மின்சார சபையின் பொறியியலாளரகள் சுட்டிக்காட்டினர்.

தேசிய மின் கட்டமைப்பிற்கு 1000 மின்சாரத்தை வழங்கவுள்ள சம்பூர் மின் உற்பத்தி திட்டம், இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளது.

முதல் கட்டத்தை 2018ஆம் ஆண்டு பூர்த்தி செய்து அதனை தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கு திட்டமிட்டுள்ள போதிலும்,
மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் தற்போது இடம்பெறுவதில்லை.

இதனால், 2018ஆம் ஆண்டாகும்போது மின்சாரத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் என பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்