செல்வராகவன் இயக்கத்தில் கதாநாயகனாக சந்தானம்

செல்வராகவன் இயக்கத்தில் கதாநாயகனாக சந்தானம்

செல்வராகவன் இயக்கத்தில் கதாநாயகனாக சந்தானம்

எழுத்தாளர் Staff Writer

16 Jul, 2016 | 12:35 pm

செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தேடித் தரவில்லை. இதையடுத்து, சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்த செல்வராகவன், தான் இயக்கி வந்த ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தையும் தனது மனைவியை வைத்து இயக்க வைத்தார்.

இதைத் தொடர்ந்து சிம்புவை வைத்து ‘கான்’ என்ற படத்தை தொடங்கினார். இப்படத்தின் படப்பிடிப்புகளும் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், திடீரென இப்படத்தை நிறுத்திவைப்பதாக அறிவித்தார். கிட்டத்தட்ட அந்த படம் கைவிடப்பட்டதாகவே தெரிகிறது.

இந்நிலையில், செல்வராகவன் அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படுத்தில் முதன்முறையாக ஒரு நகைச்சுவை நடிகரை தனது படத்தின் கதாநாயகனாக்கியிருக்கினார்.

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்பிடித்தான்’, ‘தில்லுக்குத் துட்டு’ ஆகிய படங்கள் மூலம் ஹீரோவாக உருவாகியிருக்கியிருக்கின்ற நகைச்சுவை நடிகர் சந்தானம்தான் தனது அடுத்த படத்தின் ஹீரோ என்று செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இப்படத்தின் பிற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்