16 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான நிர்ணய விலைகள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி வெளியீடு

16 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான நிர்ணய விலைகள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி வெளியீடு

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2016 | 7:11 am

16 வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான அரசாங்கத்தின் நிர்ணய விலைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்னவின் கையொப்பத்துடன் நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில், ஜூலை மாதம் 14 ஆம் திகதி முதல் இந்த நிர்ணய விலைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய 2003 ஆம் ஆண்டின் நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் பிரகாரம், உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், பொதியிடுபவர்கள், விநியோகஸ்தர்கள், வர்த்தகர்கள், அறிவிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலையில் விற்பனை செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்