மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் யோசனைகளை சட்டமாக்க நடவடிக்கை – மின்சக்தி அமைச்சு

மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் யோசனைகளை சட்டமாக்க நடவடிக்கை – மின்சக்தி அமைச்சு

மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் யோசனைகளை சட்டமாக்க நடவடிக்கை – மின்சக்தி அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2016 | 10:23 am

மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள சில யோசனைகளை சட்டமாக்குவதற்கு மின்சக்தி மற்றும் புதுப்பித்தல் சக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய மின்சக்தி தொடர்பான பொறுப்பு மற்றும் செயற்திறனை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை சட்டமாக மாற்றுவதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

மின்சாரத்தை பிறப்பித்தல் மற்றும் விநியோகித்தல் செயற்பாடுகளை செயற்திறனுடன் முன்னெடுத்தல், பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பிலான பல்வேறு யோசனைகள் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பாவனையாளர்களுக்கு தடையின்றி தொடர்ச்சியாக மின்சாரம் விநியோகிக்கப்படாமை மற்றும் சேவையில் காணப்படுகின்ற குறைப்பாடுகள் தொடர்பில் சட்டங்களுக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்