போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் வீ.ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்குக் கடிதம்

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் வீ.ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்குக் கடிதம்

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2016 | 9:58 pm

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தவரையில் சர்வதேச கலப்பு நீதிமன்ற விசாரணையை ஏற்றுக்கொண்டாலும், இந்த நீதிமன்றங்கள் எத்தகைய போர்க்குற்றங்களை விசாரிக்கப் போகின்றன என்பதை ஆராய்வதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் நன்மையைக் கவனத்திற்கொண்டு, சில குற்றச் செயல்களை சர்வதேச கலப்பு நீதிமன்றத்தில்
விசாரிப்பது வசதிப்படாது எனவும் வீ.ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், எல்லாக் குற்றங்களையும் உள்ளக நீதிமன்றத்தில் விசாரிப்பது கடினம் என்பதை உணரக்கூடியதாக உள்ளதாகவும் அவர் கூறினார.

எனவே, பிரச்சினையற்ற சில விசாரணைகள் தவிர்ந்த ஏனையவை ஒவ்வொன்றும் தனித்தனியாக எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பதை ஓர் விசேட அமைப்பு மூலம் அந்தந்த நீதிமன்றத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்பதே மேலானதென தமிழர் விடுதலைக் கூட்டணி கருதுவதாகவும் வீ.ஆனந்தசங்கரியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்