பிரான்ஸ் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 84 ஆக உயர்வு: அவசரநிலை பிரகடனம்

பிரான்ஸ் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 84 ஆக உயர்வு: அவசரநிலை பிரகடனம்

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2016 | 5:09 pm

பிரான்ஸின் நீஸ் நகரில் லொரியால் மோதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 84 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தத் தாக்குதலின் பின்னணி தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது தீவிரவாத தாக்குதலுடன் ஒத்திருப்பதாகத் தெரிவித்துள்ள பிரான்ஸ் நாட்டு அதிபர் பிரான்காயிஸ் ஹொலாந்தே, தனது கண்டனங்களையும் வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸின் நீஸ் நகரில் வியாழக்கிழமை இரவு பொது நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் திரளாகக் கூடியிருந்த இடத்தில் மர்ம நபர் ஒருவர் லொரியை அதிவேகமாக செலுத்தியதில் 77 பேர் உடல் நசுங்கி இறந்தனர். பலர் காயமடைந்தனர்.

கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர். அந்த நபர் யார் என்ற அடையாளம் தெரியவந்துள்ள நிலையில், அதுகுறித்த விபரங்களை பிரான்ஸ் பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை.

பிரான்ஸில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்