பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளின் போது சர்வதேசத்திற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் – ஜனாதிபதி

பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளின் போது சர்வதேசத்திற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2016 | 6:59 pm

பிரான்ஸின் நீஸ் நகரில் தேசிய தின நிகழ்வின் போது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தமதும், இலங்கை மக்களினதும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டு மீண்டும் கட்டியெழுப்பப்படும் நாடென்ற ரீதியில், இவ்வாறான பயங்கரவாதத் தாக்குதல்களை இலங்கை கண்டிப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி பிரங்சுவா ஹொலண்டுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சமாதானம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது இவ்வாறான சவால்களினை வென்றெடுக்க ஒற்றுமையாக செயற்படுவது குறித்து சர்வதேசத்தினர் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள், பிரான்ஸ் அரசாங்கம் மற்றும் மக்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்