பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது

பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது

பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2016 | 2:51 pm

ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில், திவிநெகும பயனாளிகளுக்கு 33 மில்லியன் ரூபா பெறுமதியான கூரைத் தகடுகள் விநியோகிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு எதிராக சட்ட மாஅதிபரினால் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க மற்றும் முன்னாள் உதவிப் பணிப்பாளர் பந்துல திலகசிறி ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

33 மில்லியன் ரூபா நிதி முறையற்ற பயன்பாடு உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான குற்றப்பத்திரிகை பிரதிவாதிகளிடம் இன்று கையளிக்கப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்