சவுதியில் இலங்கையர்களின் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்கிறது

சவுதியில் இலங்கையர்களின் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்கிறது

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2016 | 6:06 pm

சவுதி அரேபியாவின் தமாம் நகரில் இலங்கையைச் சேர்ந்த சுமார் 12 பணியாளர்கள் கடந்த மே மாதம் முதல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமக்கான சம்பளம் கடந்த நவம்பர் மாதம் முதல் வழங்கப்படாமையினால் பல்வேறு அசெளகரியங்களை எதிர் நோக்கியுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 3 ஆம் திகதி முதல் உணவுக்கான கொடுப்பனவும் வழங்கப்படவில்லை என்றும் அன்று முதல் தாம் தொடர்ந்தும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 6 நாடுகளைச் சேர்ந்த 1200 தொழிலாளர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் நியூஸ்பெஸ்ட வினவியது.

இந்த சம்பவம் தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சவுதி அரேபிய தூதரகத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்