கை,கால்கள் இன்றி பிறந்தும் திறமையால் அசத்தும் சிறுவன் (VIDEO)

கை,கால்கள் இன்றி பிறந்தும் திறமையால் அசத்தும் சிறுவன் (VIDEO)

கை,கால்கள் இன்றி பிறந்தும் திறமையால் அசத்தும் சிறுவன் (VIDEO)

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2016 | 1:55 pm

இந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் டியோ சாட்ரியோ இவருக்கு பிறக்கும் போதே கை,கால்கள் இல்லை.

இருந்தாலும் தனது திறமையால் அசத்தி வருகிறார்.

கை,கால்கள் இல்லாவிடாலும் சிறுவன் பாடசாலைக்குச் சென்று தன் கல்விகளை தொடர்கின்றார்.

இது குறித்து சாட்ரியோவின் தாயார் கூறும் போது…

கால்கள் கைகள் மாத்திரமே இல்லை, ஆனால் தன் மகன் திறமையானவன். மற்றைய குழந்தைகள் போல் சாதாரணமாகவே இருக்கின்றான். அவருக்கு கணித பாடத்தில் அதிகம் ஆர்வம் இருப்பதாகவும், சிறந்த நுண்ணறிவு கொண்டவன் எனவும் சாட்ரியோவின் தாயார் தெரிவித்துள்ளார்.

மருத்துவ செலவுகளுக்கு அரசாங்கம் நிதிகளை வழங்கி உதவி செய்து வருவதாகவும் அவரின் தாயார் கூறியுள்ளார்.

மேலும், பாடசாலை நிறைவடைந்ததும் சக மாணவர்களுடன் இணைந்து விளையாடுவான் என்றும் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் உடையவன் என்றும் அவரது தாய் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இவர் தன் வாய் மூலமே எழுதுவார் என்றும் சிறந்த திறமைசாலி எனவும் பாடசாலை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்