உதயங்கவை சர்வதேச பொலிஸாரினூடாகக் கைது செய்வதற்கான பிடியாணையைப் பிறப்பிக்குமாறு கோரிக்கை

உதயங்கவை சர்வதேச பொலிஸாரினூடாகக் கைது செய்வதற்கான பிடியாணையைப் பிறப்பிக்குமாறு கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2016 | 6:24 pm

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சர்வதேச பொலிஸாரினூடாகக் கைது செய்வதற்கான பிடியாணையைப் பிறப்பிக்குமாறு பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்திடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமானப்படைக்கு விமானங்களைக் கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பில் உதயங்க வீரதுங்கவை கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், உதயங்க வீரதுங்க இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

அதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை பொலிஸ் நிதி குற்ற விசாரணைப்
பிரிவினர் கோரியதை அடுத்து, அதற்கான அனுமதியை வழங்குவதற்கான நீதிமன்ற உத்தரவு எதிர்வரும் 18 ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்