ஹெரோயின் கடத்தல்: இலங்கையர்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் தமிழகத்தில் கைது

ஹெரோயின் கடத்தல்: இலங்கையர்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் தமிழகத்தில் கைது

ஹெரோயின் கடத்தல்: இலங்கையர்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் தமிழகத்தில் கைது

எழுத்தாளர் Bella Dalima

14 Jul, 2016 | 9:19 pm

ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்துவதற்கு முற்பட்டதாக மூன்று இலங்கையர்கள் உட்பட நால்வர் தமிழகத்தின் ராமநாதபுரம் ரயில் நிலையம் அருசில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து தமிழக Q பிரிவு பொலிஸார் 2 கிலோகிராம் ஹெரோயினைக் கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Q பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம், ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை சோதனைக்கு உட்படுத்தியபோது அவர்களின் பயணப் பொதியிலிருந்து 2 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளில், ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்துவதற்காக தயார் நிலையில் வைத்திருந்ததாக சந்தேகநபர்கள் Q பிரிவு பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்தல் முயற்சி தொடர்பில் இந்திய Q பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்