“பெருமைக்குரிய இலங்கையர்கள்” ஒலிம்பிக் சுடர் பேரணி இன்று ஆரம்பம்

“பெருமைக்குரிய இலங்கையர்கள்” ஒலிம்பிக் சுடர் பேரணி இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2016 | 1:54 pm

2016 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை வீர வீராங்கனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் MTV MBC ஊடக வலையமைப்பு நியூஸ்பெஸ்ட்டுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் ஒலிம்பிக் சுடர் பேரணி இன்று காலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

பெருமைக்குரிய இலங்கையர்கள் எனும் தொனிப்பொருளில் சுடரை ஏந்திய பேரணி நாடுமுழுவதிலும் பயணிக்கவுள்ளது.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் மற்றும் நியூஸ்பெஸ்டினால் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் கைகோர்த்துள்ளது.

இதற்கான அங்குரார்ப்பண வைபவம் சுதந்திரச்சதுக்கத்தில் நடைபெற்றது.

அங்குரார்ப்பண வைபவத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

இலங்கைக்கான பிரேஸில் உயர்ஸ்தானிகராலயத்தின் செயலாளர் மற்றும் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இங்கு கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு பதக்கத்தை பெற்றுக் கொடுத்த சுசந்திகா ஜெயசிங்க, சர்வதேச விருதுகளை பெற்றுக் கொடுத்துள்ள சிரியாணி குலவன்ச, சுகத் திலகரட்ண மற்றும் தேசிய மட்ட வீர வீராங்கனைகளும் அங்குரார்பன வைபவத்தில் கலந்துக் கொண்டிருந்தனர்.

நிலுக்க கருணாரத்ன, நீச்சல் வீரர் மத்தியூ அபேசிங்க மற்றும் ஈட்டி எறிதலில் தெரிவாகியுள்ள சுமேத ரணசிங்க ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

24 நாட்களுக்கு இந்த பேரணி நாடு முழுவதிலும் பயணிக்கவுள்ளது.

இன்று இந்த சுடரை ஏந்திய பேரணி கொழும்பில் ஆரம்பமாகி சிலாபம் புத்தளம் ஊடாக பயணிக்கவுள்ளது.

2016 ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ம் திகதி பிரேசில் ரியோடி ஜெனிரோவில் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்