பாரத லக்‌ஷ்மன் உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பான விசாரணைகள் நிறைவு

பாரத லக்‌ஷ்மன் உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பான விசாரணைகள் நிறைவு

எழுத்தாளர் Bella Dalima

14 Jul, 2016 | 3:43 pm

பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு செய்யப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.

ஷிராண் குணரட்ன, பத்மினி என் ரணவக்க, என்.சி.பி.சி. மொராயஸ் ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்றது.

எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதாக மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

இதன்போது பிரதிவாதியான துமிந்த சில்வா, சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்வதற்கு நீதிபதிகளின் அனுமதியைக் கோரியிருந்தார்.

அதற்கான விசேட காரணங்கள் முன்வைக்கப்படாமையால், அந்த வேண்டுகோளை நிராகரிப்பதாக நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளதுடன், அனைத்து பிரதிவாதிகள் மற்றும் மனுதாரர்கள் சார்பாக எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைக்க முடியும் என மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் மேலும் அறிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்