கல்வி சாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

கல்வி சாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

கல்வி சாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2016 | 7:46 am

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள அடையாள பணிப்பகிஷ்கரிப்பினால் தங்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த பணிப்பகிஷ்கரிப்பினால் பல்கலைக்கழக்கங்களின் நூல் நிலையங்கள் மூடப்பட்டிருந்தமையினால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அதிகரிக்கப்பட்ட 2,500 ரூபா கொடுப்பனவை அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பது உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் நேற்று முந்தினம் ஆரம்பித்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் இன்றைய தினமும் தொடர்கின்றது.

குறித்த கொடுப்பனவு, அரச சேவையில் உள்வாங்கப்பட்ட போதிலும் இதுவரை பல்கலைக்கழக கட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்