கடந்த ஆறு மாதங்களில் சிறைச்சாலைகளில் இருந்து 50 கைதிகள் தப்பி ஓட்டம்

கடந்த ஆறு மாதங்களில் சிறைச்சாலைகளில் இருந்து 50 கைதிகள் தப்பி ஓட்டம்

எழுத்தாளர் Bella Dalima

14 Jul, 2016 | 8:29 pm

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் இருந்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.

பாரிய குற்றங்களுடன் தொடர்புள்ள குற்றவாளிகளும் தப்பிச் சென்ற கைதிகளுள் அடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார்.

தப்பிச் சென்ற கைதிகளுள் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களும் அடங்குகின்றனர்.

அவர்களைக் கைது செய்வதற்கு பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்