இரண்டாவது நாளாகவும் தொடரும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டம்

இரண்டாவது நாளாகவும் தொடரும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2016 | 1:44 pm

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றைய தினம் ஆரம்பித்த போராட்டம் இரண்டாவது நாளாகவும் புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் இடம்பெறுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று காலை பாதையை மறித்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த போராட்டம் இரண்டாவது நாளாக இன்று காலையும் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூட வேண்டும் எனத் தெரிவித்தும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கும் மாணவர்களின் தொகையை அதிகரிக்க வேண்டும் எனக் கோரியும் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்