மெகசின் சிறையிலுள்ள நாமல் ராஜபக்ஸவை சந்தித்த ஷிரந்தி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

மெகசின் சிறையிலுள்ள நாமல் ராஜபக்ஸவை சந்தித்த ஷிரந்தி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

எழுத்தாளர் Bella Dalima

12 Jul, 2016 | 9:44 pm

ஏழு கோடி ரூபா நிதியை முயைற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை பார்ப்பதற்காக அவரது உறவினர்கள் உள்ளிட்ட சிலர் இன்று சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரைப் பார்ப்பதற்காக அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ஸ இன்று முற்பகல் அங்கு சென்றிருந்தார்.

அதன் பின்னர், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்களும் மெகசின் சிறைச்சாலைக்கு சென்று நாமல் ராஜபக்ஸவை சந்தித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்