பாசப் போராட்டம்: பாம்பிடமிருந்து குட்டியைப் போராடி மீட்ட தாய் எலி!  (Video)

பாசப் போராட்டம்: பாம்பிடமிருந்து குட்டியைப் போராடி மீட்ட தாய் எலி!  (Video)

பாசப் போராட்டம்: பாம்பிடமிருந்து குட்டியைப் போராடி மீட்ட தாய் எலி!  (Video)

எழுத்தாளர் Bella Dalima

12 Jul, 2016 | 5:15 pm

இத்தாலியின் நேப்பிஸ் நகர சாலை ஒன்றில் குட்டி எலியை ஒரு பாம்பு தனது வாயில் கவ்விக்கொண்டு வேகமாக சென்றுள்ளது.

அதனைப் பார்த்த தாய் எலி சற்றும் மனம் தளராமல் பாம்பை துரத்திச் சென்று அதன் வாலினை சரமாரியாகக் கடித்துக் குதறியது.

எலியின் கடியைத் தாங்க முடியாத பாம்பு, குட்டி எலியை கீழே போட்டுவிட்டு அருகில் உள்ள புதருக்குள் ஒடியது.

அதன் பிறகும் தாய் எலியின் ஆவேசம் அடங்கவில்லை, புதருக்குள் அந்த பாம்பை விரட்டிச் சென்றது.

சில நிமிடங்களுக்கு பிறகு பாம்பை வீழ்த்திய பெருமிதத்துடன் தாய் எலி, குட்டி எலியை நோக்கி ஒடி வந்தது.

அதுவரை அசைவின்றிக் கிடந்த குட்டி எலி தனது தாயைக் கண்டவுடன் துள்ளிக்குதித்து செல்கிறது.

ஒரு தாயின் பாசப் போராட்டத்தை விளக்கும் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்