இழுவைப்படகு மூலம் மீன்பிடிப்பதற்கான இந்திய மீனவர்களின் கோரிக்கைக்கு வடக்கு மீனவர்கள் எதிர்ப்பு

இழுவைப்படகு மூலம் மீன்பிடிப்பதற்கான இந்திய மீனவர்களின் கோரிக்கைக்கு வடக்கு மீனவர்கள் எதிர்ப்பு

இழுவைப்படகு மூலம் மீன்பிடிப்பதற்கான இந்திய மீனவர்களின் கோரிக்கைக்கு வடக்கு மீனவர்கள் எதிர்ப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2016 | 6:55 pm

இந்திய மீனவர்கள் வாரம் இரண்டு நாட்கள் இலங்கை கடற்பரப்பில் இழுவைப்படகு மூலம் மீன்பிடிக்க விடுத்துள்ள கோரிக்கையை வடக்கு மீனவர்கள் முற்றாக எதிர்ப்பதாக வட மாகாண கடற்றொழில் இணையம் தெரிவித்துள்ளது.

இன்று மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாச அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் மொஹமட் ஆலம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தரப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை வட பகுதி மீனவர்களை வெகுவாக பாதிக்குமெனவும் இதை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்திய மீனவர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் மொஹமட் ஆலம் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழக மீனவர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

மீனவர் பிரச்சினை தொடர்பில் மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக கரையோர விசைப்படகு மீனவர் சங்கத்த்தின மாவட்ட செயலாளர் பி.ஜேசுதாசன் குறிப்பிடுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்