வட் இற்கான இடைக்கால தடையுத்தரவால் அரசாங்கத்தின் வருமானத்திற்கு பாதிப்பில்லை

வட் இற்கான இடைக்கால தடையுத்தரவால் அரசாங்கத்தின் வருமானத்திற்கு பாதிப்பில்லை

வட் இற்கான இடைக்கால தடையுத்தரவால் அரசாங்கத்தின் வருமானத்திற்கு பாதிப்பில்லை

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2016 | 8:34 pm

வட் எனப்படும் பெறுமதி சேர் வரி மற்றும் தேச நிர்மாண வரி தொடர்பில் உயர்நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்கால தடையுத்தரவு அரசாங்கத்தின் வருமானத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பெறுமதி சேர் வரி தொடர்பான திருத்த சட்டமூலம் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் வௌியட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்த சட்ட மூலம் மீதான முதலாம் வாசிப்பு கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றதுடன் எதிர்வரும் 23 ஆம் திகதி இரண்டாம் வாசிப்பு இடம்பெறுமென எதிர்ப்பார்ப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த திருத்த சட்டமூலத்தை இம்மாத நிறைவுக்குள் சட்டரீதியாக நடைமுறைப்படுத்த அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தினுள் பெரும்பான்மை உள்ளதாக பிரதமர் ரணில் விக்மரசிங்க கூறியுள்ளார்.

திருத்தம் செய்யப்பட்டுள்ள வரி வீதங்கள் கடந்த மே மாதம் 2 ஆம் திகதியிலிருந்து நடைமுறையிலுள்ளதாக பிரதமர் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்