மக்கள் சக்தி 100 நாள் செயற்றிட்டம் ஆரம்பம்

மக்கள் சக்தி 100 நாள் செயற்றிட்டம் ஆரம்பம்

மக்கள் சக்தி 100 நாள் செயற்றிட்டம் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2016 | 10:06 pm

கடந்த பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 18 ஆம் திகதி வரை நாட்டின் அனைத்து பாகங்களையும் உள்ளடக்கிய வகையில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியூஸ்பெஸ்ட் முன்வந்திருந்தது.

இதன் போது பேராதனை பல்கலைக்கழகத்தின் உதவியுடன் உங்கள் பிரச்சினைகள் அடங்கிய அறிக்கை தயார் செய்யப்பட்டது.

எனினும் அந்த பிரச்சினைகளுக்கான உரிய தீர்வு வழங்கப்படாமை காரணமாக மக்கள் சார்பில் மீண்டும் முன்னிற்பதற்கு நியூஸ்பெஸ்ட் தீர்மானித்துள்ளது.

மக்களுடன் இணைந்து மக்களுக்காக செயற்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் மக்கள் சக்தி 100 நாள் என்ற பெயரில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள இந்த வேலைத்திட்டத்திற்கு இன்று முதல் மக்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் நாட்களில் தினந்தோறும் நியூஸ்பெஸ்ட் இனால் அடையாளங்காணப்பட்ட 4 பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அதற்கு தீர்வை பெறுவதற்கு மக்களின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளது.

கிண்ணியா இடிமன் கிராமத்திற்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் அம்பகமுவ பகுதியில் உள்ள பாடசாலையொன்றுக்கான குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதும் முதற்கட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் தம்புள்ளை தமனயாய சந்தியில் இருந்து எலபொல குளம் வரையான வீதி புனரமைத்தல் மற்றும் அல்மில்லேவ கிராமத்திற்கான பிரஜா சாலை ஒனறை நிர்மாணித்தல் என்பனவும் முதல் கட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த செயற்திட்டத்திற்கு உங்கள் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நியூஸ்பெஸ்ட் மக்கள் சக்தி செயலாளர் அலுவலகத்துடன் தொடர்புகொள்ள முடியும். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் 011 4 896 896. மேலும் மின்னஞ்சல் முகவரியான 100DAYS @ MAHARAJA.LK மூலமும் தொடர்பு கொள்ளமுடியும்.

மேலும் www.newsfirst.lk என்ற இணையத்தளம் நியூஸ்பெஸ்ட் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்கினூடாகவும் பொது மக்கள் எங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்