போதைப்பொருளற்ற தேசத்துக்கான முன்மாதிரி அரசியல்வாதிகளால் வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

போதைப்பொருளற்ற தேசத்துக்கான முன்மாதிரி அரசியல்வாதிகளால் வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

போதைப்பொருளற்ற தேசத்துக்கான முன்மாதிரி அரசியல்வாதிகளால் வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2016 | 7:40 pm

போதைப்பொருளற்ற தேசத்துக்கான முன்மாதிரியானது அரசியல்வாதிகளால் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரச அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இதற்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமென ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

போதையற்ற நாடு, தேசிய வேலைத்திட்டத்தின் 7 ஆவது கட்டம் புத்தளம் ஆனந்த தேசிய கல்லூரியின் மைதானத்தில் இன்று இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்புக்காக அர்பணிப்புடன் செயற்பட்டவர்கள், ஜனாதிபதியால் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

போதை ஒழிப்பு தொடர்பில் ஆயிரம் கையெழுத்துக்களுடனான மகஜரொன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்