UPDATE : தாம் கைது செய்யப்படவில்லை நாலந்தா கல்லூரியின் அதிபர் தெரிவிப்பு

UPDATE : தாம் கைது செய்யப்படவில்லை நாலந்தா கல்லூரியின் அதிபர் தெரிவிப்பு

UPDATE : தாம் கைது செய்யப்படவில்லை நாலந்தா கல்லூரியின் அதிபர் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2016 | 3:39 pm

தாம் கைது செய்யப்படவில்லை நாலந்தா கல்லூரியின் அதிபர் அறிவித்துள்ளார். தாம் கைது செய்யப்பட்டதாக தவறான தகவல்களை ஊடகங்கள் வௌியிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பு நாலந்தா கல்லூரியின் அதிபர் கைது செய்யப்பட்டதாக சற்று நேரத்திற்கு முன்னர் அறிவிக்கப்ட்டிருந்தது.

பாடசாலைக்குள் ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்ட்டது.

நாலந்தா கல்லூரியின் அதிபர் பல்வேறு நிதி மோசடி சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக குறித்த ஆசிரியரால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்