திருகோணமலை, குமாரபுரம் படுகொலை வழக்கு; இராணுவத்தினர் இருவர் அடையாளங் காணப்பட்டனர்

திருகோணமலை, குமாரபுரம் படுகொலை வழக்கு; இராணுவத்தினர் இருவர் அடையாளங் காணப்பட்டனர்

திருகோணமலை, குமாரபுரம் படுகொலை வழக்கு; இராணுவத்தினர் இருவர் அடையாளங் காணப்பட்டனர்

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2016 | 7:22 pm

திருகோணமலை, கிளிவெட்டி – குமாரபுரம் பகுதியில் 1996 ஆம் ஆண்டில் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சாட்சிகளால் 2 இராணுவத்தினர் இன்று அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இந்த படுகொலை வழக்கு தொடர்பான சாட்சி விசாரணைகள் பத்தாவது நாளாக அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இன்றும் நடைபெற்றது.

இன்றைய சாட்சி விசாரணைகளின் போது படுகொலை இடம்பெற்ற போது குமார புரத்தில் கிராம சேவகராக கடமையிருந்தவரின் சாட்சியும் இன்று நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது

இன்றைய விசாரணைகளின் போது சம்பவத்தில் தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிலர் சாட்சியமளித்துள்ளனர்.

இதன் போது கிளிவெட்டி – குமாரபுரம் பகுதியில் தாக்குதல் மேற்கொண்ட இராணுவத்தினரும் பாதிக்கப்பட்டவர்களால் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது 16 வயது சிறுமியொருவர் பால் சேகரிப்பு மத்திய நிலையத்திற்குள் வைத்து துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டமை தொடர்பிலும் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

குமாரபுரம் படுகொலை வழக்கின் பாதிக்கப்பட்டோரின் சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடையுள்ளமை குறிப்பிடத்தக்கது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்