கண்டி மடுல்கலை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 26 பேர் காயம்

கண்டி மடுல்கலை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 26 பேர் காயம்

கண்டி மடுல்கலை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 26 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2016 | 9:34 am

கண்டி மடுல்கலை பகுதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மடுல்கலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் அதிகமானோர் பாடசாலை மாணவர்கள் என மடுல்கலை வைத்தியசாலையின் பதில் மாவட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கபரகலையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்று மடுல்கலை பகுதியில் வீதியைவிட்டு விலகி மண்சுவரில் மோதி இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்