அதிகரிக்கப்பட்ட வட் வரி, தேச நிர்மாண வரி இன்று முதல் இடைநிறுத்தம்

அதிகரிக்கப்பட்ட வட் வரி, தேச நிர்மாண வரி இன்று முதல் இடைநிறுத்தம்

அதிகரிக்கப்பட்ட வட் வரி, தேச நிர்மாண வரி இன்று முதல் இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2016 | 2:45 pm

மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை அதிகரிக்கப்பட்ட வட் மற்றும் தேச நிர்மாண வரி விதிப்பை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

விமல் வீரவங்ச உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை கருத்திற்கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன், புவனேக அளுவிஹாரே மற்றும் பிரசந்த ஜயவர்தன ஆகிய உயர்நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வரி விதிப்பின் போது, நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டம் தொடர்பில் கருத்திற்கொள்ளவில்லை என இதன்போது உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நல்லாட்சியாக இருக்கலாம் அல்லது வேறு ஆட்சியாக இருக்கலாம், நாட்டை நிர்வகிக்கும் போது சட்டத்தின் நான்கு திசைகளையும் உள்ளடங்கியே செயற்பட வேண்டும் என நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் இது தொடர்பில் சட்டமொன்றை வகுத்தால் இந்த உத்தரவு செல்லுபடியற்றதாக மாறும் எனவும், நீதியரசர்கள் குழாம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்