நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக வழக்கு

நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக வழக்கு

நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக வழக்கு

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2016 | 10:23 am

நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக அதுகுறித்து அடையாளம் காணப்படும் சந்தர்ப்பத்திலேயே வழக்குத் தொடர்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

முன்னைய பரிசோதனை நடவடிக்கைகளின்போது சூழலை துப்புரவு செய்யுமாறு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றாமையின் காரணமாக இத்தகைய தீர்மானத்திற்கு வர நேரிட்டுள்ளதாக அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரசிலா சமரவீர குறிப்பிட்டார்.

இதன் பிரகாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை டெங்கு காய்ச்சல் பரவியுள்ள 8 மாவட்டங்களை கேந்திரமாகக் கொண்டு திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், கண்டி, காலி, மாத்தறை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நுளம்புகள் தொடர்பில் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்