நிபந்தனைகளை மீறி போக்குவரத்தில் ஈடுபட்ட 80 பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் மீள கைப்பற்றப்பட்டன

நிபந்தனைகளை மீறி போக்குவரத்தில் ஈடுபட்ட 80 பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் மீள கைப்பற்றப்பட்டன

நிபந்தனைகளை மீறி போக்குவரத்தில் ஈடுபட்ட 80 பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் மீள கைப்பற்றப்பட்டன

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2016 | 3:27 pm

அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி, குறைப்பாடுகளுடன் போக்குவரத்தில் ஈடுபட்ட 80 பஸ்களின் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மீளக் கைப்பற்றியுள்ளது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இத்தகைய பஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி.ஏ. ஹேமசந்திர கூறினார்.

உரிய முறையில் ஆசனங்களை அமைக்காமை, பயணச்சீட்டு விநியோகிக்காமை, பயண முடிவிட பெயர்ப் பலகைகளை சரியான முறையில் காட்சிப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இந்த பஸ்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய பஸ்களில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யுமாறு இந்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறைபாடுகளை நிவர்த்தி செய்தபின்னர் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை மீண்டும் வழங்குவதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி.ஏ. ஹேமசந்திர தெரிவித்தார்.

போக்குவரத்து அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளை எதிர்காலத்தில் தீவிரப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்