நாட்டிலுள்ள வயோதிபர் விடுதிகளின் தரம் தொடர்பில் ஆராய்வு

நாட்டிலுள்ள வயோதிபர் விடுதிகளின் தரம் தொடர்பில் ஆராய்வு

நாட்டிலுள்ள வயோதிபர் விடுதிகளின் தரம் தொடர்பில் ஆராய்வு

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2016 | 12:26 pm

நாட்டிலுள்ள வயோதிபர் விடுதிகளின் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

அரசாங்கத்தினாலும், அதனுடன் இணைந்த நிறுவனங்களின் ஊடாகவும் 306 வயோதிபர் விடுதிகள் நடத்தப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலன்புரிகள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதவிர செல்வந்தர்கள் மற்றும் அமைப்புகளினாலும் 300 வயோதிபர் விடுதிகள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிலைமையின் கீழ், சில வயோதிபர் விடுதிகளின் தரம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் தனியார்த்துறையின் ஒத்துழைப்புடன் சொகுசு வயோதிபர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்