ஆயித்தியமலை வட்டாரம்  ரஜமஹா விஹாரையில் புதையல் தோண்டிய ஐவர் கைது

ஆயித்தியமலை வட்டாரம் ரஜமஹா விஹாரையில் புதையல் தோண்டிய ஐவர் கைது

ஆயித்தியமலை வட்டாரம் ரஜமஹா விஹாரையில் புதையல் தோண்டிய ஐவர் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2016 | 1:13 pm

ஆயித்தியமலை, வட்டாரம்  ரஜமஹா விஹாரையில் புதையல் தோண்டிய ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதேச மக்களின் உதவியுடன் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஆயித்தியமலை, மொனராகலை மற்றும் நக்கல பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பூஜைப் பொருட்கள் மற்றும் உபகரணங்களும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களை சியம்பலாண்டுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்