அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் ஆளும் கன்சர்வேர்டிவ் கட்சி தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி

அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் ஆளும் கன்சர்வேர்டிவ் கட்சி தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி

அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் ஆளும் கன்சர்வேர்டிவ் கட்சி தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2016 | 12:09 pm

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் கன்சர்வேர்டிவ் கட்சி தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றிப்பெற்றுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காத போதிலும் கன்சர்வேர்டிவ் கட்சி தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

150 ஆசனங்களை கொண்ட அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் 76 ஆசனங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில், ஆளும் கன்சர்வேர்டிவ் கட்சி தலைமையிலான கூட்டணி தற்போது 74 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் தமது கட்சி வெற்றிப்பெற்றுள்ளதாக பிரதமர் மல்கம் டர்ன்புல் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்க்கட்சியான தொழிற்கட்சி 66 ஆசனங்களை கைப்பற்றியுள்ள நிலையில் கன்சர்வேர்டிவ் கட்சி தலைமையிலான கூட்டணியின் வெற்றியை ஏற்றுக் கொண்டுள்ள தொழிற்கட்சி தலைவர் Bill Shorten, பிரதமர் மெல்கம் டர்ன்புல்லுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்