வெளிநாட்டவர்களின் தேவைக்கேற்ப அரச நிர்வாகத்தை முகாமைத்துவம் செய்ய இடமளிக்கப்போவதில்லை 

வெளிநாட்டவர்களின் தேவைக்கேற்ப அரச நிர்வாகத்தை முகாமைத்துவம் செய்ய இடமளிக்கப்போவதில்லை 

எழுத்தாளர் Bella Dalima

09 Jul, 2016 | 5:59 pm

எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டின் உள் விவகாரங்களில் தலையீடு செய்வதற்கோ, வெளிநாட்டவர்களின் தேவைக்கேற்ப அரச நிர்வாகத்தை முகாமைத்துவம் செய்வதற்கோ இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விடயங்களுக்கு தமது ஆட்சிக்காலத்தில் சந்தர்ப்பம் வழங்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பேராதனையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் வெளிநாட்டு நீதிபதிகளின் ஊடாக வழக்குகளை விசாரணை செய்வதற்கு இடமில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்