பத்து அம்சப் போட்டியில் இராணுவ கழக வீரர் அஜித்குமார தேசிய சாதனை

பத்து அம்சப் போட்டியில் இராணுவ கழக வீரர் அஜித்குமார தேசிய சாதனை

பத்து அம்சப் போட்டியில் இராணுவ கழக வீரர் அஜித்குமார தேசிய சாதனை

எழுத்தாளர் Bella Dalima

09 Jul, 2016 | 6:56 pm

94 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டிகளின் பத்து அம்சப் போட்டியில் இராணுவ கழக வீரரான அஜித்குமார இலங்கை சாதனையை நிலைநாட்டினார்.

இதேவேளை, கோலூன்றிப் பாய்தலில் யாழ். மகாஜனா கல்லூரியின் அனிதா ஜெகதீஸ்வரன் தேசிய சாதனையை முறியடிக்க எடுத்த முயற்சி மயிரிழையில் தவறியது.

மஹிந்த ராஜபக்ச மைதானத்தில் நடைபெறும் தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் இராணுவ கழக வீரரான அஜித்குமார பத்து அம்சப் போட்டியில் 6724 புள்ளிகளைக் குவித்து சாதித்தார்.

தெற்காசியாவின் அதிவேகமான வீரரான இமாஷ ஹேஷான் 100 மீற்றரை 10.5 செக்கன்ட்களில் கடந்து தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.

மகளிருக்கான 100 மீற்றர் ஓட்டத்தை 12.1 செக்கன்ட்டில் பூர்த்திசெய்த விமானப்படையின் ஷஷிகா விதானதுரகே தங்கப்பதக்கத்தை தன் வசப்படுத்தினார்.

மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.30 மீற்றர் உயரத்துக்குத் தாவிய யாழ். மகாஜனா கல்லூரியின் அனிதா ஜெகதீஸ்வரன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.

தேசிய சாதனையை 3.34 மீற்றர் உயரத்துக்கு தாவி சாதனை படைக்க அவர் எடுத்த முயற்சி மயிரிழையில் தவறியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்