தமது நிலங்களை விடுவிக்கக்கோரி கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

தமது நிலங்களை விடுவிக்கக்கோரி கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

09 Jul, 2016 | 10:12 pm

இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது நிலங்களை விடுவிக்கக்கோரி கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யுத்தம் நிறைவு பெற்று பல வருடங்களாகியும் தமது சொந்த நிலங்களுக்கு செல்ல முடியாதுள்ளதாகவும் அவை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களை விடுவிக்குமாறு கோரி, குறித்த பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் மக்கள் அண்மையில் மகஜர் ஒன்றைக் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்