டலஸ் தாக்குதல்: சந்தேகநபரின் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

டலஸ் தாக்குதல்: சந்தேகநபரின் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

டலஸ் தாக்குதல்: சந்தேகநபரின் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Jul, 2016 | 5:47 pm

அமெரிக்காவின் டலஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கறுப்பின இளைஞர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து டலஸ் நகரில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதன் போது அங்கிருந்த பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதுடன் அதில் 5 பொலிஸார் கொல்லப்பட்டதுடன் 7 பேர் காயமடைந்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலில் 25 வயதான சந்தேகநபர் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து, குறித்த சந்தேகநபரின் வீட்டில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் மூலப்பொருட்கள், துப்பாக்கிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் வேறெந்த அமைப்புடனும் இணைந்து செயற்படவில்லை எனவும் தனித்தே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டலஸ் நகர தலைமை பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்