கைதடி செவிப்புலன், விழிப்புலனற்றோர் பாடசாலையின் பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கைதடி செவிப்புலன், விழிப்புலனற்றோர் பாடசாலையின் பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

09 Jul, 2016 | 7:10 pm

யாழ். கைதடியில் அமைந்துள்ள செவிப்புலன், விழிப்புலனற்றோர் பாடசாலையின் பழைய மாணவர்கள் இன்று பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களின் வருடாந்த கலந்துரையாடலை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்தே பழைய மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கைதடியில் அமைந்துள்ள செவிப்புலன், விழிப்புலனற்றோர் பாடசாலையின் பழைய மாணவர்களின் 49 ஆவது வருட ஒன்றுகூடலில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த பழைய மாணவர்களை பாடசாலை வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு சென்றிருந்த 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஒன்றுகூடலில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளிலிருந்தும் வடக்கு, கிழக்கு பகுதிகளிலிருந்தும் பழைய மாணவர்கள் வருகை தந்திருந்ததாக எமது செய்தியாளர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்