கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2016 | 8:42 am

கதிர்காம கந்தனின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, ரயில் மற்றும் பஸ் இணைந்த விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பண்டாரவளை மற்றும் மாத்தறை பகுதிகளுக்கு இடையில் இந்த போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க குறிப்பிட்டார்.

இதற்கமைய பண்டாரவளை மற்றும் மாத்தறை வரையான முடிவிடங்களுக்கு ரயிலில் பயணித்து, அந்த இடங்களில் இருந்து இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் ஊடாக பயணிகள் கதிர்காமம் நோக்கிச் செல்லமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைந்த ரயில் மற்றும் பஸ் சேவைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்