கண்டி நகரை கேந்திரமாகக் கொண்டு புதிய பஸ் சேவையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

கண்டி நகரை கேந்திரமாகக் கொண்டு புதிய பஸ் சேவையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

கண்டி நகரை கேந்திரமாகக் கொண்டு புதிய பஸ் சேவையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2016 | 1:29 pm

கண்டி நகரை கேந்திரமாகக் கொண்டு புதிய பஸ் சேவையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய மாகாண போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

உத்தேச திட்டமாக திகன – கண்டி மற்றும் கடுகண்ணாவை – கண்டி ஆகிய இரண்டு பிரதான வீதிகளை மையமாகக் கொண்டு இந்த புதிய பஸ் சேவையை ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக மாகாண போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த புதிய பஸ் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய பஸ் சேவைகள் சீ.சீ.ரி.வி. கமரா கட்டமைப்பு, ஜீ.பி.எஸ். தொழில்நுட்பம், தொலைபேசி வசதி மற்றும் இலத்திரனியல் பயணச்சீட்டு விநியோக முறை என்பவற்றை கொண்டிருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதவிர இந்த பஸ் சேவைகளை கண்காணிப்பதற்கான நிலையமொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்பொருட்டு பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்