இலங்கை, பாகிஸ்தான், மாலைத்தீவு இடையே போதைப்பொருள் கடத்தல்: சந்தேகநபர்கள் இருவர் கைது

இலங்கை, பாகிஸ்தான், மாலைத்தீவு இடையே போதைப்பொருள் கடத்தல்: சந்தேகநபர்கள் இருவர் கைது

இலங்கை, பாகிஸ்தான், மாலைத்தீவு இடையே போதைப்பொருள் கடத்தல்: சந்தேகநபர்கள் இருவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

09 Jul, 2016 | 8:11 pm

இலங்கையை மையமாகக் கொண்டு இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவிற்கு இடையில் முன்னெடுக்கப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் கண்டுபிடித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேகநபர்கள் இன்று அதிகாலை தெஹிவளையில் கைது செய்யப்பட்டதை அடுத்து பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலைத்தீவு பிரஜைகள் இருவரே போதைப்பொருளுடன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

இந்த சந்தேகநபர்கள் கொழும்பை மையமாகக் கொண்டு போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த பிரதான கடத்தல்காரர்கள் எனக் கருதப்படுவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

மாலைத்தீவு பிரஜைகளான சந்தேகநபர்கள் இருவரிடமிருந்தும் 305 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மாதம் 25 ஆம் திகதி 500 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரொய்னுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இவர் இலங்கை, பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஊடாக போதைப் பொருளை கடத்தும் கும்பல் ஒன்றின் முக்கிய உறுப்பினர் என கருதப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது ஒன்றரை கிலோகிராம் ஹெரொய்னுடன் கைது செய்யப்பட்ட இரண்டு மாலைத்தீவு பிரஜைகளுக்கு குறித்த பாகிஸ்தான் பிரஜையே போதைப் பொருளை வழங்கியிருந்தமை விசாரணைகளின்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்