அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் மாகாண முதலமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடல்

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் மாகாண முதலமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடல்

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் மாகாண முதலமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2016 | 8:15 am

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் மாகாண முதலமைச்சர்களுடன் அரசியலமைப்பு செயற்பாட்டுக் குழு விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (08) இடம்பெற்றுள்ளது.

தென் மற்றும் வட மத்திய மாகாண முதலமைச்சர்களைத் தவிர ஏனைய அனைத்து முதலமைச்சர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து இந்த கலந்துரையாடலின் போது முதலமைச்சர்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்ததாக பாராளுமன்ற ஊழியர்கள் குழுவின் தலைவரான நீல் இத்தவெல குறிப்பிட்டார்.

கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்ட சகல விடயங்கள் தொடர்பாகவும் உபகுழுக்கள் ஊடாக எதிர்காலத்தில் தொடர்ந்தும் ஆராயப்படவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்