இலங்கையர்கள் தொடர்பில் கடும் விதிமுறைகளைப் பின்பற்றவுள்ளது ஸ்விட்ஸர்லாந்து

இலங்கையர்கள் தொடர்பில் கடும் விதிமுறைகளைப் பின்பற்றவுள்ளது ஸ்விட்ஸர்லாந்து

இலங்கையர்கள் தொடர்பில் கடும் விதிமுறைகளைப் பின்பற்றவுள்ளது ஸ்விட்ஸர்லாந்து

எழுத்தாளர் Bella Dalima

09 Jul, 2016 | 3:29 pm

அகதி அந்தஸ்திற்காக விண்ணப்பிக்கும் இலங்கை பிரஜைகள் தொடர்பில் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றவுள்ளதாக சுவிட்ஸர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் பின்னரான நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி சுவிட்ஸர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மனித உரிமைகள் விடயத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இலங்கை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள சுவிட்ஸர்லாந்து, கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடலுக்கான உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளதை உதாரணமாகக் காட்டியுள்ளது.

சுவிட்ஸர்லாந்தின் அரச குடிவரவு செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளுக்கான அகதி அந்தஸ்துக்கான நடைமுறைகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுவிட்ஸர்லாந்தின் அரச குடிவரவு செயலகம் குறிப்பிட்டுள்ளது.

வருடத்தின் கடந்த மே மாத இறுதி வரையான காலப்பகுதியில் அகதி அந்தஸ்து கோரி 1316 விண்ணப்பங்கள் இலங்கைப் பிரஜைகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த நாட்டு அரச குடிவரவு செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐயாயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் சுவிட்ஸர்லாந்தினால் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 3674 பேருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

1613 பேர் நாடு கடத்தப்படும் நிலையில் இருப்பதாகவும் சுவிட்ஸர்லாந்து ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்