முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்

முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்

முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

08 Jul, 2016 | 1:49 pm

முன்னாள் விமான சேவை அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

ஶ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளுக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ள முன்னாள் அமைச்சரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஶ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 6 பேர் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்