பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் இன்றும் பணிபகிஷ்கரிப்பு

பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் இன்றும் பணிபகிஷ்கரிப்பு

பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் இன்றும் பணிபகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Jul, 2016 | 8:05 am

பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் முனனெடுக்கப்படுவதாக பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரை அதற்கான தீர்வுகள் எட்டப்படவில்லை என பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் நிமல் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

தங்களின் கோரிக்கை தொடர்பில் பிரதி அமைச்சரின் பதில்கூட இதுவரை செயல்வடிவம் பெறவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எனவே தங்களின் கோரிக்கைகளுக்கு பதில் கிட்டும் வரை தொடர்ந்தும் பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் எனவும் பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் நிமல் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊழியர்கள் சங்கத்தினரின் கோரிக்கைகள் தொடர்பில் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்கவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

எனினும் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படும் பகுதிகளில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களிடம் பிரதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்