சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்கள் பொத்துவில் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்கள் பொத்துவில் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்கள் பொத்துவில் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

08 Jul, 2016 | 11:16 am

பொத்துவில் அறுகம்பை பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சிகரெட்டுக்களை கொண்டு சென்ற லொறியுடன் இரண்டு சந்தேகநபர்களும் நேற்றிரவு 9.30 அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 23 சிகரெட் பக்கெற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்