10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொக்கேய்ன் நியூஸிலாந்தில் கைப்பற்றப்பட்டது

10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொக்கேய்ன் நியூஸிலாந்தில் கைப்பற்றப்பட்டது

10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொக்கேய்ன் நியூஸிலாந்தில் கைப்பற்றப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2016 | 8:55 pm

10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருள் நியூஸிலாந்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

நியூஸிலாந்துக்கு கடத்தப்பட்ட 35 கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை அந்நாட்டு பொலிஸார் மற்றும் சுங்கப்பிரிவினர் கைப்பற்றினர்.

இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 44 வயதான மெக்சிகோ பிரஜையொருவரும், 56 வயதான அமெரிக்க பிரஜையொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தொடர்மாடிக் குடியிருப்பொன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, மற்றுமொரு மெக்சிகோ பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நான்கு வாரங்களின் பின்னர் தடுக்கப்பட்ட பாரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவம் இதுவென அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்